Skip to main content Skip to footer

சிங்களக் குடியேற்றம்- பௌத்த விகாரைகள்- யுத்த வெற்றி நினைவுச்சின்னங்கள்- தொல்பொருள் நில ஒதுக்கீடுகள் விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன- சர்வதேச அமைப்பு புதிய அறிக்கை

March 8, 2021
Source
Thinakkural

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர் இனநாயக நாடாக சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது.

ஓக்லாண்ட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஓக்லாண்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப்போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர் இனநாயக நாடாக சென்று கொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது.

  • தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமாக உள்ளது – வடக்கு மாகாணத்தில் ஆறு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் இருக்கிறது.

  • வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக பிரிக்கும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கத்துடன் சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள், யுத்த வெற்றி நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் நில ஒதுக்கீடுகள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வனப்பகுதி ஒதுக்கங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன.

  • நீதியை நிலை நாட்டும் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசு பின்வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு, எதிர்காலதில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை நிறுத்தவும் தடுக்கவும் சர்வதேச சமூகத்தின் செயல் ரீதியான வகிபாகத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆறு நாடுகள் கூட்டாக சேர்ந்து ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு முன்வைத்துள்ள இலங்கை தொடர்பிலான முதல் வரைவு அலட்சியப்படுத்தியுள்ளது.

  • இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளர் பச்சிலட் மற்றும் நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ. நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலான ஐ. நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையை தயாரித்த அனைத்து உறுப்பினர்கள் ஆகியோரது பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தில் உள்ளடக்கவேண்டும்.